Saturday, May 2, 2020

My dream about How to live my life:
நல்ல பேரும் புகழும் சம்பாதிக்கனும்.

அரசாங்கத்துக்கு கரெக்ட்டா tax கட்டணும்.
கூட இருக்குற எல்லாருக்கும் உதவி செய்யணும். நமக்கு கெட்டது நெனைக்கிறவங்களுக்கும் கூட நல்லது செய்யணும். குடும்பத்த நல்லா பாத்துக்கணும்.புதுசு புதுசா திறமையை வளத்துக்கிட்டே இருக்கணும். நமக்குள்ள இருக்குற passion'அ எப்பவும் விட்ர கூடாது. நம்ம நாட்டு மக்கள் ஏதாச்சும் இயற்கை பேரிடர்கள்ல கஷ்டப்படும்போது நம்மளால முடிஞ்ச உதவிய செய்யணும். தோல்விய கண்டு துவண்டு போக கூடாது. நம்மள நம்பி நம்ம பின்னாடி வந்தவங்கள நம்மளோட சுயலாபத்துக்காக யூஸ் பண்ண கூடாது. நம்ம கூட இருக்கவங்களுக்கு கஷ்டம் வர்றப்போ அவங்களுக்கு சப்போர்ட்டா இருக்கனும் யார் எதிர்த்தாலும். நல்ல விஷயத்துக்காக முதல் அடி எடுத்து வைக்கிறது நம்மளாதான் இருக்கணும். ஒரு நல்ல விஷயம் பண்ண போறோம்னு தெரிஞ்சா அதுல லாபநஷ்டம் பாக்காம முழுமனசோட பண்ணனும். நம்மளோட ரிஸ்க்கை நம்மளே எடுக்கணும். மத்தவங்கள வச்சு ரிஸ்க் எடுத்துட்டு அந்த புகழ் மட்டும் நமக்கு கிடைக்கனும்னு நினைக்கக்கூடாது. நம்மள எந்த விஷயத்துக்காக மத்தவங்க கிண்டல் பன்னாங்களோ அதே விசயத்துல சாதிச்சுட்டு பேசுனவங்க மூஞ்சில கரிய பூசணும். நம்ம பண்றது சரினு தோணுச்சுனா அதை யார் முன்னாடி வேணாலும் பயப்படாம துணிச்சலா சொல்லணும். நம்ம பேர யூஸ் பண்ணி யாராச்சும் ஆதாயம் தேட நெனச்சாங்கன்னா உடனே உள்ள புகுந்து அதுக்கு எதிர்ப்பு தெரிவிக்கணும். நம்மள கல்யாணம் பண்ணவங்களோட திறமையையும் ஊக்குவிச்சு அவங்க அந்த துறையில சாதிக்கிறதுக்கு பக்க பலமா இருக்கணும். நம்ம குழந்தைகளுக்காக நம்ம பேரு புகழ் எல்லாத்தையும் தூக்கி போட்டுட்டு குழந்தையோட குழந்தையா நாமளும் மாறி அவங்கள சந்தோசப்படுத்தனும். நம்ம முதுகுக்கு பின்னாடி பேசுறவங்கள பத்தி கவலைப்படாம நம்ம உண்டு நம்ம வேலை உண்டுன்னு இருக்கனும். கடமையை கரெக்ட்டா செஞ்சுட்டு எளிமையா வாழ கத்துக்கணும் .
சுருக்கமா சொல்லனும்னா அஜித் மாதிரி வாழனும்!
Happy Birthday Thala!